இஃதிகாப்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

இதிகாப்

இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்விற்காக பள்ளியில் தங்குவதற்காக சொல்லப்படும் 


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலான் மாதத்தில் தன் வாழ்நாள் முழுவதும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள் அவர்களுக்குப் பின்னால் அவர்களின் மனைவிமார்கள் இருந்துள்ளார்கள்

ஹதீஸில் வந்துள்ளது


حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بۡنُ يُوسُفَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ عُقَيْلٍ، عَنِ ابۡنِ شِِهَ زُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أيله عليه وسلم أَنَّكَ انَ يَعْتَكِفُ الْعَشْرَ الأَوَاخِرَ مِنْ رَمَضَانَ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ، ثُمَّ اعْتَكَفَ أَزْوَاجُهُ مِنْ بَعْدِهِ.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

'நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!' 

ஸஹீஹ் புகாரி : 2026. 

அத்தியாயம் : 33. இஃதிகாஃப்


அன்பிற்குரிய சகோதரர்களே கடைசி பத்திலே இஃதிகாப் இருப்பது சுன்னத் என்பதாக நாம் இந்த ஹதீஸின் மூலமாக அறிய முடிகின்றது


இதிகாபின் நோக்கம்.

இப்னுல் கய்யூம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், இஃதிகாபின் நோக்கம் அதனுடைய உயிர்நாடி என்னவெனில் அல்லாஹுத்தஆலா உடன் உள்ளம் ஒன்று விடுவதாகும்.

அதாவது 

எல்லா பகுதிகளையும் விட்டும் நீங்கி அல்லாஹ் உடன் ஒன்றிந்து இணைந்து விடுவதாகும்.

படைப்புகளோடு ஈடுபாட்டிற்கு பகரமாக அல்லாஹ்வுடைய ஈடுபாட்டிலேயே இருந்து அனைத்து வகையான எண்ணங்களையும் விட்டு நீங்கி அல்லாஹ்வின் நினைவிலும் அன்பிலும் நிரம்பி விடுவதாகும்.


இஃதிகாபின் நாட்கள்

இறுதியில் உள்ள பத்து நாட்களே இஃதிகாபின் நாட்கள்


حَدَّثَنَا إِسْمَاعِيلُ بۡنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي ابۡنُ وَهْبٍ، عَنْ يُوَّأَنَ، عَنْ يُونَسَنَ، َهُ عَنْ عَبْدِ اللَّهِ بۡنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ على الله عليه اخِرَ مِنْ رَمَضَانَ.

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

'நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!' 

ஸஹீஹ் புகாரி : 2025. 

அத்தியாயம் : 33. இஃதிகாஃப்


حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بینۡ عَبْدِ اللَّهِ بینۡ إِبْرَاهِيمَ بۡنِ الْحَارِثِ التَّيْمِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْيرَّحْمَنِ، عَنْ ضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَعْتَكِفُ فِي الْعَشْرِ الأَوْسَطِ مِنْ رَمَضَانَ، فَاعْتَكَفَ عَامًا حَتَّى إِذَا كَانَ لَيْلَةَ إِحْدَى يْلَةَ إِحْدَى وَعِيْلَةَ الَّتِي يَخْرُجُ مِنْ صَبِيحَتِهَا مِنِ اعْتِكَافِهِ قَالَ "" مَنْ كَانَ اعْتَكَفَ مَعِي فَلْكَفَ مَعِي فَلْكَفَ مَعِي فَلْكَفَ ، وَقَدۡ أُرِيتُ هَذِهِ اللَّيۡلَةَ ثُمَّ أُنْسِيتُهَا، وَقَدْ رَأَيْتُنِي أَسْجُدُ يَسْجُدُ فِي حَتِهَا، فَالْتَمِسُوهَا فِي الْعَشْرِ الأَوَاخِرِ، وَالْتَمِسُوهَا فِي كُلِّ وِتْرٍ "". فَمَطَرَتِ السَّمَاءُ تِلْكَ اللَّيْلَةَ، وَكَانَ الْمَسْجِدُ عَلَى عَرِيشٍ فَوَكَفَ الْمَسْجِدَ الْمَسْجِدُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَبْهَتِهِ أَثَرُ الْمَاءِ وَالطِّينِ، مِنْ صُبْحِ عَنْ صُبْحِ

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமலானில் நடுப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாஃபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன. 

ஸஹீஹ் புகாரி : 2027. 

அத்தியாயம் : 33. இஃதிகாஃப்


இஃதிகாபின் நன்மைகள் 

 وَمَنِ اعْتَكَفَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ جَعَلَ اللَّهُ بَيْنَهُ وَبَيْنَ النَّارِ ثَلَاثَ خَنَادِقَ

رواه الطبراني


யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடி ஒரு நாள் இஃதிகாப் இருப்பாரோ அவருக்கும் நரகத்திற்கும் இடையே அல்லாஹுத்தஆலா மூன்று அகலிகளை திரையாக ஏற்படுத்துகிறான் .

தப்ரானி.


நரகத்திற்கும் இருந்த மனிதனுக்கும் இடையில் மூன்று அகலிகளை அல்லாஹ் ஏற்படுத்துகிறான் என்றால் என்ன அர்த்தம் அவன் நரகம் செல்ல மாட்டான் சொர்க்கத்தில் அல்லாஹ் அவனை சேர்த்து விடுவான் என்பது இதனுடைய பொருளாகும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

23ம் தராவீஹ்