தொழுகை
அல்லாஹு தினமும் ஐவேளை தொழுவதை கடமையாக ஆக்கியுள்ளான் خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَلَى الْعِبَادِ مَنْ جَاءَ بِهِنَّ لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ ) ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அந்தக் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் வீணாக்கி விடாமல் முறையாக நிறைவேற்றுபவருக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒப்பந்தம் அல்லாஹ்விடம் உள்ளது. அத்தொழுகைகளை யார் நிறைவேற்றவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவனுக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவனை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் - ரலி, நூற்கள் : முஅத்தா, அஹ்மத், அபூதாவூத், நஸாயீ 457, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்) பஜ்ரு தொழுகை ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தின் முக்கியத்துவமும், சிறப்பும், சட்டங்கள...