தொழுகை

அல்லாஹு தினமும் ஐவேளை தொழுவதை கடமையாக ஆக்கியுள்ளான் 



خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَلَى الْعِبَادِ مَنْ جَاءَ بِهِنَّ لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ )

ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அந்தக் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் வீணாக்கி விடாமல் முறையாக நிறைவேற்றுபவருக்கு சொர்க்கத்தில் நுழையும் ஒப்பந்தம் அல்லாஹ்விடம் உள்ளது. அத்தொழுகைகளை யார் நிறைவேற்றவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவனுக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவனை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் - ரலி, நூற்கள் : முஅத்தா, அஹ்மத், அபூதாவூத், நஸாயீ 457, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)



பஜ்ரு தொழுகை 

ஃபஜ்ருடைய முன் சுன்னத் இரண்டு ரக்அத்தின் முக்கியத்துவமும், சிறப்பும், சட்டங்களும்:

1- நபியவர்கள் உபரியான தொழுகைகளில் மிக முக்கியத்துவம் அளித்த தொழுகை:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் அளவுக்கு வேறு எந்தக் கூடுதலான தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்ததில்லை. புஹாரி 1169

ஆயிஷா (ரலி) அவர்கள்: நபி (ஸல்) அவர்கள் இஷா தொழுகை தொழுதுவிட்டுப் பின் எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். மேலும், உட்கார்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். (ஃபஜ்ருடைய) பாங்குக்கும் இகாமத்துக்கும் இடையே இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். அவ்விரு ரக்அத்களையும் நபி (ஸல்) அவர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை" (புஹாரி 1159).

=======================================

2- இந்த உலகம் அதிலுள்ளவற்றை விட சிறந்த தொழுகை:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் இந்த உலகையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தவையாகும். (இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் 1314).

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 1315).

=======================================

3- நபியவர்கள் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை சுருக்கமாகத் தொழுவார்கள்::

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்பு தொழும் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) அளவிற்கு வேறு எந்தக் கூடுதலானத் தொழுகையையும் அதிவிரைவாக (மிகச் சுருக்கமாக)த் தொழுததை நான் பார்த்ததில்லை." (முஸ்லிம் 1313).

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஃபஜ்ர்) தொழுகை அறிவிப்பைச் செவியுற்றால் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களைச் சுருக்கமாகத் தொழுவார்கள்" (முஸ்லிம் 1308)

=======================================

4- ஃபஜ்ருடைய முன் சுன்னத்தில் ஸுரதுல் ஃபாதிஹாவைத் தொடர்ந்து ஓத வேண்டிய அத்தியாயங்கள் அல்லது வசனங்கள்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்" (என்று தொடங்கும் 109ஆவது) அத்தியாயம், "குல் ஹுவல்லாஹு அஹத்" (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தையும் ஓதினார்கள்." (முஸ்லிம் 1316).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் முதலாவது ரக்அத்தில் "அல்பகரா" அத்தியாயத்தில் உள்ள "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா...' (என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், இரண்டாவது ரக்அத்தில் "ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பிஅன்னா முஸ்லிமூன்" முடியும் :52ஆவது வசனத்தையும் ஓதுவார்கள் (முஸ்லிம் 1317)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் (முதல் ரக்அத்தில் அல்பகரா அத்தியாயத்திலுள்ள) "கூலூ ஆமன்னா பில்லாஹி வ மா உன்ஸில இலைனா..."(என்று தொடங்கும் 2:136ஆவது) வசனத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) "ஆலு இம்ரான்" அத்தியாயத்திலுள்ள "தஆலவ் இலா கலிமதின் சவாயிம் பைனனா வ பைனக்கும்..." (என்று தொடங்கும் 3:64ஆவது) வசனத்தையும் ஓதுவார்கள். (முஸ்லிம் 1318).

=======================================

5- நபியவர்கள் வீட்டில் பஃஜ்ருடைய முன் சுன்னத்தை தொழுது விட்டு வலப் புறம் சாய்ந்து படுத்துக்கொள்வார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள்: நபி (ஸல்) அவர்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுததும் நான் விழித்திருந்தால் என்னுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிடில் (ஃபஜ்ர்) தொழு கைக்கு அழைக்கப்படும்வரை படுத்து ஓய்வெடுப்பார்கள். (புஹாரி 1161).

ஆயிஷா (ரலி) அவர்கள்: நபி (ஸல்) அவர்கள், இரண்டு ரக்அத் தொழுததும் வலப் புறம் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள். (புஹாரி 1160).

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: "ஃபஜ்ர் நேரம் வந்து விட்டது, தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) முதலாவது தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொல்- முடித்ததும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பாக அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (ஃபஜ்ருடைய சுன்னத்) தொழுவார்கள். 'இகாமத்' சொல்(- தொழுகை நடத்து)வதற்காகத் தம்மிடம் வரும்வரை வலப் பக்கமாக சாய்ந்து படுத்திருப்பார்கள் (புஹாரி 626).

=======================================

6- தூக்கத்தின் காரணத்தால் ஃபஜ்ரு தவறியவர் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தைத் தொழுது விட்டு ஃபஜ்ரைத் தொழுவது:

நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் ஒரு முறை பிரயாணத்தில் அயர்ந்து உறங்கி விட்டதால் பஃஜ்ரு தொழுகையை சூரிய உதயத்தின் பின் தொழ வேண்டி ஏற்பட்டது அப்போது நபியவர்கள் பஃஜ்ருடைய முன் சுன்னத்தை தொழுது விட்டே ஃபஜ்ரைத் தொழுதார்கள். அபூகத்தாதா ஹாரிஸ் பின் ரிப்ஈ அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் நீண்ட ஒரு ஹதீஸாகும். (முஸ்லிம் 1213).

பிரயாணத்தில் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தைத் தொழுவதற்கும் இச்செய்தி ஆதாரமாக உள்ளது.

இது நபியவர்களின் வாழ்வில் பிரயாணத்தில் ஒரு முறை நடந்த நிகழ்வாகும். இதைக் காரணம் காட்டி சூரிய உதயத்திற்குப் பின் ஃபஜ்ரை வழக்கமாகத் தொழுபவர்கள். “நிச்சயமாகத் தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமை” என்ற அல்குர்ஆன் வசனத்துக்கு மாறு செய்கிறார். அடுத்து பின் வரும் ஹதீஸும் அவர்களுக்கு எச்சரிக்கையாகும்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சூரியன் உதிப்பதற்குமுன் சுப்ஹு தொழுகையின் ஒரு ரக்அத்தை அடைந்தவர், சுப்ஹு தொழுகையை அடைந்தார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (புஹாரி: 579).




حنَ ْنُ ،الَ انِ اْنُ اازِازِازِازِازِازِازِازِاز்ِகிற்கும் إِرَاامَ ولم يلُ "" " يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ "". قَالُوا لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا. قَالَ "" فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهَا الْخَطَايَا "".
ஐவேளைத் தொழுகைகள் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
528. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவரது (வீட்டு) வாச-ல் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். “அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தாங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தனர்.

“இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் குற்றங்களைக் களைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் புகாரி 


பஜ்ரு அஸர் தொழுகை.

سمعت رسول الله صلى الله عليه وسلم 
لن يلج النار احد صلى قبل طلوع الشمس وقبل غروبها 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் யார் சூரிய உதயத்திற்கு முன்னாலும் சூரியன் மறைவதற்கு முன்னாலும் தொழுகிறார்களோ அவர்களை ஒருபோதும் அல்லாஹ் நரகத்தில் நுழைவிக்க மாட்டான்.
 அவைகள் பஜ்ரும் அஸருமாகும்.


லுஹர் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

23ம் தராவீஹ்

இஃதிகாப்